தி. சுப்புலாபுரம்
தி. சுப்புலாபுரம் ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதியிலுள்ள கிராமப் பஞ்சாயத்துகளுள் ஒன்று.. இது ஆண்டிப்பட்டியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும் தேனியில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரில் உள்ள தி எனும் முன்னொட்டு திம்மரசநாயக்கனூரைக் குறிக்கிறது. ஒரே பெயரில் பல ஊர்கள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க இந்த முன்னொட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதே பெயர் தாங்கி கண்டமனூர் சாலையில் சுப்புலாபுரம் உள்ளது அதன் பெயர் எம்(மரிக்குண்டு).சுப்புலாபுரம்.உழவும் நெசவும் இவ்வூரின் முக்கியத் தொழில்கள். பல கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலகங்கள் இங்கே செயல்படுகின்றன. அதில் TRT TeX குறிப்பிடும்படியான வர்த்தகம் புரிகிறது. இந்த ஊரில் நெய்யப்படும் துணிகளுக்கு தனி மவுசு தமிழகமெங்கும் உண்டு.
Read article
Nearby Places
ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்